சமீபத்தில் தோழி ஒருவர் பெண்களை சமமாக பாவிக்கும் அருமையான ஆண்கள் இருக்கத்தானே செய்கிறார்கள் என்று கூறி சான்றாக ஒரு புத்தகத்தில் வந்திருந்த கட்டுரையை காட்டினார்.
என்ன புத்தகம், வார இதழா ...மாத இதழா எனபது மறந்துவிட்டது. ஆனால் அது பிரபல எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியது.
தங்கள் திருமணம் காதல் திருமணம் என்றும் மனைவி வேலைக்கு போய் பொருளாதார தேவைகளை கவனித்துக் கொண்டதால் , தான் தன எழுத்து பணிகளை தடையின்றி செய்யமுடிந்ததாக கூறி இருந்தார்.
குழந்தைகளை பார்த்துகொள்வதற்காக, மனைவி பின்னர் பணியிலிருந்து விலகி விட்டாராம்.
இதோடு நிறுத்தி இருந்தால் பரவாயில்லை.
மனைவியின் இந்த 'புரிதலுக்காக' பதிலுக்கு தான் அவரை எங்கு வேண்டுமானாலும் தனியாக பயணம் செய்யவும், நினைத்ததை செய்யவும் அனுமதித்திருப்பதாக எழுதி இருக்கிறார்.
ஒரு குடும்பத்தையே நிர்வகித்து, அதன் பொருளாதார தேவைகள் மற்றும் குழந்தை வளர்ப்பு என்று ஆண், பெண் என இருவர் வேலையையும் சேர்த்து செய்த பெண்ணுக்கு , கணவரின் 'அனுமதி' கிடைத்து தான் தனக்கான சுய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள வேண்டுமா ?
ஆணுக்கு பெண் செய்வது புரிதல் என்றால் பெண்ணுக்கு ஆண் செய்வதும் புரிதாலகத்தானே இருக்க வேண்டும்? இதில் 'அனுமதி' எங்கிருந்து வந்தது ?
வேறு யாரும் எழுதி இருந்தால் தவறுதலான வார்த்தை பிரயோகம் என விட்டு விடலாம். ஆனால் பிரபல எழுத்தாளர் எனும்போது இதில் தவறுக்கு வாய்ப்பு இல்லை.
இது சமூகத்தின் ஆணாதிக்க மனோபாவத்தையே வெளிச்சம் போட்டு காட்டுகிறது ! இதில் எழுத்தாளர் என்ன ...செருப்பு தைப்பவர் என்ன.. வித்தியாசம் ஒன்றும் இல்லை.
ஆணாதிக்க சிந்தனையுடன், அது சார்ந்த செயல்களுடன் இருக்கிறோம் என்ற realization கூட இல்லாத நிலையில் தான் ஆண்கள் சமூகம் இருக்கிறது.
தவறு என்று தெரிந்து செய்தால் திருத்துவதற்கோ, திருந்துவதற்கோ வாய்ப்பு உள்ளது. தெரியவே இல்லையென்றால் ...?!!
இதை 'சம உரிமை பேணும் உதாரண ஆணுக்கு அடையாளமாய் காட்டிய என் தோழி போன்ற பெண்களை என்ன செய்வது ...?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக