வியாழன், 14 மார்ச், 2013

இலங்கைத் தமிழர்களுக்கு நீதி கேட்டு தமிழக மாணவர்களின் போராட்டம்


இலங்கையில் நடந்தது இனப் படுகொலை என்று அறிவிக்கக் கூறியும், ராஜபட்சே போர்க் குற்றவாளி என்று அறிவித்து சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தக் கூறியும் தமிழக மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகிறார்கள்.

தமிழகத்தில், பல வருடங்களாக , எந்த ஒரு உயிர் போகிற பொதுப் பிரச்சினைக்கும் வெளியில் வந்து போராடாத மாணவர்கள் இன்று போராட்டம் என்று இறங்கி இருப்பது பாராட்டுதலுக்கு உரியது.

அரசியல் கட்சிகளை ஒதுக்கி பொது மக்களின் ஆதரவை பெற்று இப் போராட்டத்தை அடுத்த நிலைக்கு எடுத்து செல்வதே எங்கள் நோக்கம் என்கிறார்கள் மாணவர்கள்.
இதற்கே ஒரு தனி 'சபாஷ்' கூறலாம்.

ஆனால்...
மாணவர்கள் கையில் எடுத்திருக்கும் பிரச்சினை சாதாரணமானது அல்ல.

அரசியல் என்பதன் பால பாடம் தெரியாத , அரசியல் பார்வை என்பதை முற்றிலுமாக ஒதுக்கிய பாடத் திட்டங்களை படித்து வளர்ந்த மாணவர்கள் இதை எப்படி கையாளப் போகிறார்கள் ?
தமிழகத்தின் திராவிட அரசியல் தான் மாணவர்கள் பார்த்து வளர்ந்த அரசியல். அது சீரழிந்த அரசியல். அதனை அடித்தளமாக வைத்தும் இந்த பிரச்சினையை அணுக முடியாது.

மாணவர்கள் செய்ய நினைத்தாலும் அதை சரி வர செய்யமுடியாமல் இருப்பதற்கு, அவர்களை சரியான வகையில் தயார்படுத்தாத கல்வி முறைகள் ஒரு மிகப் பெரிய காரணம்.

மாநில அளவிலான அரசியலே தெரியாத நிலையில், மாநிலங்களுக்கு இடையிலான அரசியல் மற்றும் மத்திய அரசியல், அனைத்து மாநிலங்களையும் இணைத்த இந்திய அரசியல் , இவற்றை தாண்டிய அண்டை நாடுகளுடனான வெளியுறவு அரசியல், உலக அரசியல், புவி சார் அரசியல், etc என்று பலப் பல இருக்கின்றன. இவற்றைப் பற்றிய அடிப்படை புரிதல் இல்லாமல், ஈழப் பிரச்சினை பேச முடியாது
இதை மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறதா நம் கல்வி முறை?
இல்லை என்றே சொல்ல வேண்டும் .

படிக்காத அரசியலை, மாணவர்கள் , பார்த்து, தெரிந்து கற்றுக் கொள்வதற்கு  தலைவர்கள் இருக்கிறார்களா? அவர்களின் சரியான வழிகாட்டுதல்கள் இருக்கிறதா  என்றால் அதற்கும் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

இந்திய மாநிலங்களை, இந்தியா என்ற ஒரு குடையின் கீழ் உணர்வு பூர்வமாக  இணைத்திருப்பது காந்தியும், நேதாஜியும், விடுதலைப் போராட்ட வரலாறுக்கு 65 வயதே ஆகி இருப்பதுவும், தேசிய கீதமும் தான் .

மற்றபடி,

இந்தியாவின் federal setup - ல் , மொழிவாரி மாநிலங்கள்அந்தந்த  மண்சார்ந்த பிரச்சினைகள், மொழி சார்ந்த பிரச்சினைகள், கலாச்சாரம் சார்ந்த பிரச்சினைகள், வித்தியாசமான அணுகுமுறைகள் என்று பலவற்றால் உள்ளபூர்வமாக பிரிந்து கிடக்கின்றன

இலங்கைப் பிரச்சினையை எடுத்துக் கொண்டால் , வட மாநிலத்தவருக்கு அதன் முழு சாரம் தெரியவில்லை. புரிவதும் இல்லை. இந்தியாவில் உள்ள ஒரு மாநிலத்தின் பிரச்சினை என்றே பார்க்கப் படுகிறது. அதே போல , தமிழர்களில் எத்தனை பேருக்கு காஷ்மீர் பிரச்சினையின் ஆழம் தெரியும் ? வட கிழக்கு மாநிலங்களின் பிரச்சினை புரியும் ? என்ற கேள்வியும் எழுகிறது.
இந்த இடைவெளியை இணைப்பதற்கான முயற்சிகள் எடுக்கப் படவேண்டும். அதற்கான காலமும், அவசரமும், அவசியமும் வந்துவிட்டது.

மாநில மொழி செய்திதாள்கள் அந்தந்த மாநில செய்திகளுக்கே முக்கியத்துவம் தருகின்றன. அது தவிர டெல்லி செய்திகளும், மத்திய அரசு செய்திகளும் சிறிதாக இடம் பெறுகின்றன.

ஆங்கில செய்திதாள்கள் விகிதாசாரத்தில் சற்றே வித்தியாசம் காட்டி செய்திகள் வெளியிடுகின்றன.

காட்சி ஊடகங்களும் இதே நிலை தான்.

அண்டை மாநிலங்கள், பிற மாநிலங்கள், அனைத்து மாநிலங்கள் என்று அங்கு நடக்கும் விஷயங்கள் , அரசியல், நிர்வாகம் குறித்த செய்திகள் , மக்களுக்கு தெளிவாகஎல்லா நாட்களும் கிடைக்கும் வகையில் ஊடகங்கள் தருவதில்லை.

சுருங்கச் சொன்னால் , ஏதாவது பரபரப்பு செய்தியாக இருந்தாலொழியஅண்டை மாநிலமான கேரளாவிலோ, கர்நாடகாவிலோ, ஆந்திராவிலோ என்ன நடக்கிறது என்பதை தமிழர்கள் தெரிந்து கொள்வதற்கு வாய்ப்பு இல்லைஅன்றாட தொடர்பு நிலை முற்றிலுமாக அற்றுப் போன நிலை தான்.
இன்றைய இன்டர்நெட் யுகத்திலும், அதை பயன்படுத்துபவர்கள் மிகக் குறைவே.

மொழி வாரியாக தனித் தனி தீவாக பிரிந்து கிடக்கும் மக்களுக்கு இடையில்  உணர்வு பூர்வமான, உள்ள பூர்வமான பற்றுதலும், சக உணர்வும் ஏற்படுவதற்கு அன்றாட செய்தி பரிமாறல்கள் அத்தியாவசியமான ஒன்று.

120 கோடி என்பது மிகப் பலம் வாய்ந்த, உலகின் பல சரித்திரங்களை மாற்றி அமைக்கக் கூடிய மக்கள் சக்தி. ஆனால், சொந்த நாட்டிற்குள்ளேயே , உணர்வாலும், உள்ளத்தாலும் இணைக்கும் இணைப்புப் பாலம் இல்லாமல் பிரிந்து , விழலுக்கு இறைத்த நீராய் இருக்கிறது இந்த மாபெரும் மக்கள் சக்தி.
உணர்வாலும், உள்ளாதாலும் இணைந்திருக்க வேண்டியதன் அவசியம் .., மாணவர்கள் தங்களின்  இந்த போராட்டத்திற்கு வழிகாட்டுவதற்கு இங்குள்ள தலைவர்களை ஒதுக்கிய நிலையில், சுய பலன் இல்லாத , பிற மாநிலத்தை சேர்ந்தவர்களின் வழிகாட்டுதல்கள் கிடைத்திருக்க கூடும் என்பது தான்.

அமெரிக்கா , ஐரோப்பிய நாடுகள் பலவற்றில், தேர்தல் நடைபெறும்போது , அதன் ஆரம்பக் கட்டப் பணிகள்முதல் , தனிப் பட்ட முறையில் வேட்பாளர்களின் பிரசார வியுகம் எப்படி அமைய வேண்டும் , அதற்கான அறிக்கை தயாரிப்பு , ஊடகங்களை பயன்படுத்துவது , இன்ன பிற தேர்தல் களப் பணிகள் போன்றவற்றில் மாணவர்கள் ஈடுபடுத்தப் படுகிறார்கள். நேரிடையாக ஈடுபடுவதால், தேர்தல் அரசியல், அதன் பின் வரும் அதிகார அரசியல் போன்றவற்றை முழுமையாக அதில் ஈடுபட்டு தெரிந்து கொள்ளும் வாய்ப்பு மாணவர்களுக்கு ஏற்படுகிறது .

இத்தகைய வாய்ப்புகள் இந்திய மாணவர்களுக்கு இல்லை.
அரசியலைமுற்றிலுமாக நீக்கிய பாடத்திட்டங்களும், செயல்முறை பங்களிப்புக்கான வாய்ப்புகளும் இல்லாமல், வழிகாட்டுதலுக்கான தலைவர்களும் இல்லாத இன்றைய இந்திய மாணவர்கள் தான் நாளை இந்தியாவை ஆளப் போகிறவர்கள் !!

கல்வியாளர்கள், அரசு, தேர்தல் ஆணையம் , சமூக ஆர்வலர்கள் என்று அனைத்து தரப்பிலும் இது குறித்து சிந்தித்து , தேவையான மாற்றங்களை கொண்டுவருவது மிகவும் அவசியம்.

மார்ச் 8 உலக பெண்கள் தினம்

உலக மயமாக்கலுக்கு பின் பெண்களின் நிலை எப்படி இருக்கிறது?

கல்வியை பொறுத்த வரையில், பெண்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. பெண்கள் மருத்துவ துறை சார்ந்த படிப்புகளை அதிகம் தேர்வு செய்து படிக்கின்றனர். இன்ஜினியரிங் படிக்கும் மாணவிகள் வெறும் 15 சதவீதம் மட்டுமே.

அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புது புது கண்டுபிடிப்புகள் போன்றவற்றில் பெண்களின் பங்கு இல்லை என்பது தான்  இன்றைய 21ஆம் நூற்றாண்டிலும் நிலைமையாக இருக்கிறது .
பணியிடத்தில் , பெண்கள்  மிக உயரிய பதவிகளை அடைவதில் சிக்கல் இருக்கிறது. பெரும்பாலான பெண்கள் mid level என்கிற அளவோடு தங்கள் பணியிட சாதனைகளை முடித்துக் கொள்கிறார்கள்இதற்கு காரணம் பெண்களின் குடும்ப பொறுப்புகள்குடும்பமா, வேலையா என்றால் , பெரும்பாலான பெண்கள் , குடும்பத்தையே முதலிடத்தில் வைக்கிறார்கள். குடும்பத்தின் ஆதரவு இருந்தாலும், குழந்தைகளுக்கு தாயின் மீது இருக்கும் emotional  dependency - ம்  இதற்கு ஒரு முக்கிய காரணம். இது இந்தியப் பெண்களுக்கு தான் என்றில்லை. உலக பெண்கள் அனைவரும் இதை எதிர்கொள்கிறார்கள்.

இந்தியாவின் அனைத்து வகையான ஊடகங்களும் பெண்களை பல வகைகளிலும்  பாராட்டிக் கொண்டும் , ஆணாதிக்க மனோபாவத்தை  கடுமையாக சாடிக் கொண்டும் இருக்கும்  வேளையில், சற்றே வித்தியாசமாக சென்னையை சேர்ந்த ஆண் bloggers சிலரிடம் இது குறித்து கேட்கப் பட்டது.
இதோ ஆண்களின் பார்வையில் பெண்கள் :

பெண்கள் பூப்பெய்தியதை ஒரு விழாவாக எடுத்து சிறு பெண்களை கூச்சப் படவைக்கும் சடங்குகள், பெண்கள் படித்து முடித்தவுடன் அவர்களை யார் கையிலாவது திருமணம் என்ற பெயரில் பிடித்துக் கொடுத்துவிடவேண்டும் என்று எண்ணுவது போன்றவற்றை விடுத்துகுடும்பங்கள்,அவர்களை சுதந்திரமாக தான் சார்ந்த முடிவுகளை எடுப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்கிறார் முத்தையா ஸ்ரீராம்

சினிமாக்களில் பெண்களை மோசமாக , ஆபாசமாக  சித்தரிப்பதோடு அல்லாமல், ஆண்களுக்கு அடங்கியவர்களாகவே தொடர்ந்து காட்டப் படுவது , சினிமா மேல் அதீத மோகம் கொண்ட சமூகத்தில் உள்ள மனிதர்களின் கண்ணோட்டத்தில் பாதிப்பை ஏற்ப்படுத்துகிறது. இவை தடுக்கப் படவேண்டும் என்கிறார் ராம் திலக்.

தாயை மதிப்பவன், எந்த சூழ்நிலையிலும்  பிற பெண்களை அவமதிக்க மாட்டான். பெண்களை அவர்களுடைய அறிவுக்காகவோ, செயலுக்காகவோ மதிக்கத் தெரியாதவர்கள் கூட , எல்லா பெண்களும் தாய் என்ற அந்தஸ்தை ஒரு நிலையில் அடைகிறார்கள் என்பதற்காகவே மதிக்க வேண்டும் என்கிறார் ஹரி கிருஷ்ணா .
இந்தியப் பெண்களை தாக்கும் Auto –Immune diseases :
1.      Hashimoto's thyroiditis.
2.      Graves' disease
3.      Multiple sclerosis (MS)
4.      Myasthenia gravis
5.      Systemic lupus erythematosus (lupus)
6.      Rheumatoid arthritis
இவை தவிர Osteoporosis போன்ற அனைத்து நோய்களையும் பட்டியலிட்டு, அதற்கான தடுப்பு மற்றும் வந்த பின் அதற்கான மருத்துவ முறைகள் குறித்து உள்ளார்ந்த அக்கறையோடு விவாதிக்கிறார் தீபக் ரகுராமன்.  


இந்தியாவில்,பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விடும் school  dropouts  6-10 வயது வரைஉள்ள குழந்தைகள் 25 %. இதுவே 10-13 வயது குழந்தைகள் என்றால் அது 50% என்று அதிகரிக்கிறது என்று சொல்கிறது அரசு குறிப்பு [ Time Magazine dated April 29, 2010] .  23% பெண் குழந்தைகள் பூப்பெய்தியவுடன், சரியான சானிடரி நாப்கின்ஸ் வாங்க முடியாததால் / கிடைக்காததால், பள்ளிப் படிப்பை நிறுத்திவிடுகிறார்கள். [AC Nielsen- Plan India Survey ] .  உலக அளவில் 40% [ 4 மில்லியன்குழந்தைத் திருமணங்கள் இந்தியாவில்தான் நடக்கின்றன [BBC dated October 2011].  2010-ல் இருந்ததை விட 2011-ல் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 3 மில்லியன் அதாவது 30 லட்சம் குறைவு ! பெண் குழந்தைகள் பிறப்பதற்கே அனுமதி வேண்டி இருக்கிறது. இதையும் தாண்டி , பிறந்து விட்டால், பெண்கள் படிப்பதற்கு பிறர் அனுமதி வேண்டி இருக்கிறது.திருமணம் வேண்டுமா, வேண்டாமா?..குழந்தை வேண்டுமா வேண்டாமா போன்று எந்த விஷயத்திலும் தனி உரிமை என்பது இல்லை என்று ஆதாரங்களை அடுக்கி விவாதிக்கிறார் Sylvian Patrick.

ஆண்கள் பல கோணங்களில் பெண்கள் குறித்த கருத்துகளை எடுத்து வைத்தாலும் எல்லோரும் ஒரே குரலில் கூறியது அவர்களுடைய ஆதர்சப் பெண், அவரவருடைய  'அம்மா' என்பதுதான். தங்களுடைய எண்ணம், செயல் என்று அனைத்தும் தங்கள் அம்மாவின் வளர்ப்பினால் வந்ததே என்றார்கள்.

ஆண்கள், 'தாய்' என்கிற பெண்களால் உருவாக்கப்படும் பிம்பங்களே என்பது தெளிவு.

ஆண்-பெண்  சம உரிமை, சுதந்திரம் போன்றவை வேறெங்கும் இல்லை. இவற்றை சமூகப் பழக்கத்தில் கொண்டுவருவதுஅம்மா’ வாகிய பெண்களிடம் தான் இருக்கிறது. அவற்றை நிலை நிறுத்தும் வகையில்  பாட திட்டங்களும் வடிவமைக்கப் படவேண்டும் என்பது அவசியம்.

இந்தியாவிலேயே இளம்வயது விமானி ஒரு தமிழ் பெண் - அவருடன் ஒரு Interview


பவிகா பாரதி என்னும் சாதனைப் பெண் …. தமிழ் பெண்.. புதுமை பெண்

பவிகா...கேட்பதற்கே இனிமையாக இருக்கும் இந்த பெயருக்கு சொந்தக் காரர் ஒரு இளம் வயது சாதனையாளர். இவர் ஒரு விமானி ..

அவருடனான ஒரு கலந்துரையாடல்  
உங்கள் பின்னணி பற்றி சொல்லுங்கள் பவிகா .

என் பெற்றோர் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர்கள். நான்  மும்பையில் பிறந்து வளர்ந்தவள். என் அப்பா வழி தாத்தாவிற்கு பாரதி என்றால் மிகவும் உயிர். தன் குழந்தைகள் அனைவருக்கும் அவர்கள் பெயருடன் பாரதி என்ற பெயரையும் சேர்த்தே வைத்தாராம். அந்த வகையில் என் பெயரிலும் பாரதி என்று இருக்கிறது .

பள்ளிப் பருவத்திலிருந்தே Pilot ஆவதுதான் உங்கள் லட்சியம், கனவு எல்லாமாகவும் இருந்ததா ?

இல்லை. 10 ஆம் வகுப்பு முடிக்கும் வரையில் எனக்கு டாக்டர் ஆவதுதான் கனவாக இருந்தது. பின் தற்செயலாக எனக்குத் தெரிந்த ஒரு பெண்ணை சந்திக்க நேர்ந்தது, அப்போது அவர் தன்னுடைய கணவர் ஒரு Pilot என்றும் அவருடைய வேலை குறித்த விஷயங்களையும் தெளிவாக எடுத்துக் கூறினார். அவர் கூறிய பல்வேறு தகவல்களும் எனக்கு Pilot ஆகவேண்டும் என்ற ஆசையை தூண்டுவதாக இருந்தது.

அதன் பின்னர் வெறும் 15 நாட்களில் டாக்டர் ஆகவேண்டும் என்ற எண்ணம் மாறி  Pilot ஆக வேண்டும் என்ற எண்ணம் வலுவாக தோன்றிவிட்டது.

Pilot training உங்களுக்கு சிரமமாக இருந்ததா ?

 நான் என்  பெற்றோருக்கு ஒரே பெண் என்பதால் கொஞ்சம் செல்லமாக வளர்க்கப் பட்ட பெண். அதனால் முதலில் கொஞ்சம் சிரமம் இருந்தது. மும்பையிலிருந்து விலகி , செய்தித்தாள் கூட வராத ஒரு இடத்தில் எங்களுக்கு ட்ரைனிங். சிரமப் படாமல் நாம் அடைய நினைக்கும் எதையும் அடைய முடியாது என்பதால், ஆவது என்ற இலட்சியத்தை மட்டுமே மனதில் நிறுத்தி சிரமங்களை கடந்தேன். என்னுடன் என் அம்மாவும் ட்ரைனிங் எடுத்துக் கொண்டதால் அதுவும் உதவியாக இருந்தது.

உங்களுடன் , உங்கள் அம்மாவும் ட்ரைனிங் எடுத்துக் கொண்டார்கள் என்றா சொல்கிறீர்கள் ?

ஆமாம். Pilot ஆகும் என் விருப்பத்தை சொன்னவுடன் ,பயிற்சிக்காக 16 வயதில் என்னை தனியாக  வெளிநாட்டிற்கு அனுப்புவதில் விருப்பமில்லை. இந்தியாவிலேயே பயிற்சி எடுப்பதற்கு வழி செய்தபோது, எனக்குத் துணையாக என்னுடன் வரும் அம்மாவையும் "நீயும் என் பயிற்சியில் சேரக் கூடாது?" என்று கேட்டு அப்பாதான் ஊக்கப் படுத்தினார். அம்மாவிற்கு அப்போது வயது 37.அப்படிதான் நாங்கள் இருவரும் சேர்ந்து பயிற்சி எடுத்து Pilot லைசென்ஸ் வாங்கினோம்.

Limca Book of Records-ல் உங்களுடைய பெயர் இடம் பெற்றிருக்கிறது. எந்த சாதனைக்காக என்று கூற முடியுமா ?

Pilot license வாங்குவதற்கு 18 வயது முடிந்திருக்க வேண்டும். நான் 18 வயது முடிவதற்கு  முன்னரே  பயிற்சியை முடித்து விட்டாலும், லைசென்ஸ் வாங்குவதற்காக பொறுத்திருந்து 18 வயதில் வாங்கினேன். அந்த வகையில், இந்தியாவிலேயே , மிக இளம் வயதில் லைசென்ஸ் வாங்கியவர் என்றமுறையில் ல் என் பெயர் இடம் பெற்றிருக்கிறது. அதே போல 2012- ல்,  21 வயதில் Commercial Pilot License வாங்கியது , அம்மாவும் பெண்ணுமாக சேர்ந்து பயிற்சி எடுத்து லைசென்ஸ் வாங்கியது போன்ற 4 சாதனைகளுக்காக Limca Book of Records- ல் இடம் பெற்றுள்ளது.

பள்ளி முடித்தவுடனேயே இதில் வந்துவிட்டதால், மேலே படிப்பதற்கு உங்களுக்கு விருப்பம், வாய்ப்பு இருந்ததா ?
நான் Aviation- degree பண்ணினேன். இப்போது American university-ல் M.B.A.படித்துக் கொண்டிருக்கிறேன்.

நீங்கள் commercial Pilot ஆனபின், உங்கள் விமானத்தில் பல பிரபலங்கள் வந்திருப்பார்கள். அவர்களில் யாராவது...

ஆமாம். ஒரு முறை டாக்டர். கலாம் அவர்கள் என் விமானத்தில் travel பண்ணுவது தெரிந்து நான் cockpit- லிருந்து போய் அவரை  சந்தித்து பேசினேன். அவரும் என்னை நன்கு ஞாபகம் வைத்து பேசியது மகிழ்ச்சியாக இருந்தது.ஏனென்றால் முதல் வாரம் தான் அவர் கையால் award  வாங்கி இருந்தேன்.

இது தவிரவும், உங்களுக்கு music , drawing  போன்றவற்றில் மிகுந்த ஆர்வம் உண்டு என்பது குறித்து..

ஆம். music , drawing எல்லாவற்றிலும் நான் மாநில அளவில் prize வாங்கி இருக்கிறேன்.

நீங்கள் எதை செய்தாலும் அதில் உங்கள் முழு திறமையையும் வெளிப்படுத்தி excel பண்ணுகிறீர்கள்.
உங்களை சாதனையாளராக மாற்றி இருப்பதும் உங்களுடைய இந்த approach தான் என்று தோன்றுகிறது.
ஒரு தமிழ் பெண் இந்திய அளவில் இளம் வயது சாதனையாளராக அதுவும் 4 விதமான சாதனைகள் பண்ணி இருப்பது தமிழ் நாட்டிற்கே பெருமை.

நன்றி பவிகா பாரதி

விரிவான ஆடியோ உரையாடலுக்கு .. http://www.youtube.com/watch?v=Dv000MCtOJw&feature=youtu.be