பவிகா பாரதி என்னும் சாதனைப்
பெண் …. தமிழ் பெண்.. புதுமை
பெண்
பவிகா...கேட்பதற்கே இனிமையாக இருக்கும் இந்த பெயருக்கு சொந்தக்
காரர் ஒரு இளம் வயது
சாதனையாளர். இவர் ஒரு விமானி
..
அவருடனான
ஒரு கலந்துரையாடல்
உங்கள்
பின்னணி பற்றி சொல்லுங்கள் பவிகா
.
என் பெற்றோர் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர்கள். நான் மும்பையில்
பிறந்து வளர்ந்தவள். என் அப்பா வழி
தாத்தாவிற்கு பாரதி என்றால் மிகவும்
உயிர். தன் குழந்தைகள் அனைவருக்கும்
அவர்கள் பெயருடன் பாரதி என்ற பெயரையும்
சேர்த்தே வைத்தாராம். அந்த வகையில் என்
பெயரிலும் பாரதி என்று இருக்கிறது .
பள்ளிப்
பருவத்திலிருந்தே Pilot ஆவதுதான் உங்கள் லட்சியம், கனவு
எல்லாமாகவும் இருந்ததா ?
இல்லை.
10 ஆம் வகுப்பு முடிக்கும் வரையில்
எனக்கு டாக்டர் ஆவதுதான் கனவாக
இருந்தது. பின் தற்செயலாக எனக்குத்
தெரிந்த ஒரு பெண்ணை சந்திக்க
நேர்ந்தது, அப்போது அவர் தன்னுடைய
கணவர் ஒரு Pilot என்றும் அவருடைய வேலை
குறித்த விஷயங்களையும் தெளிவாக எடுத்துக் கூறினார்.
அவர் கூறிய பல்வேறு தகவல்களும்
எனக்கு Pilot ஆகவேண்டும் என்ற ஆசையை தூண்டுவதாக
இருந்தது.
அதன் பின்னர் வெறும் 15 நாட்களில்
டாக்டர் ஆகவேண்டும் என்ற எண்ணம் மாறி
Pilot ஆக
வேண்டும் என்ற எண்ணம் வலுவாக
தோன்றிவிட்டது.
Pilot
training உங்களுக்கு
சிரமமாக இருந்ததா ?
நான் என் பெற்றோருக்கு ஒரே பெண் என்பதால்
கொஞ்சம் செல்லமாக வளர்க்கப் பட்ட பெண். அதனால்
முதலில் கொஞ்சம் சிரமம் இருந்தது.
மும்பையிலிருந்து விலகி , செய்தித்தாள் கூட
வராத ஒரு இடத்தில் எங்களுக்கு
ட்ரைனிங். சிரமப் படாமல் நாம்
அடைய நினைக்கும் எதையும் அடைய முடியாது
என்பதால், ஆவது என்ற இலட்சியத்தை
மட்டுமே மனதில் நிறுத்தி சிரமங்களை
கடந்தேன். என்னுடன் என் அம்மாவும் ட்ரைனிங்
எடுத்துக் கொண்டதால் அதுவும் உதவியாக இருந்தது.
உங்களுடன்
, உங்கள் அம்மாவும் ட்ரைனிங் எடுத்துக் கொண்டார்கள் என்றா சொல்கிறீர்கள் ?
ஆமாம்.
Pilot ஆகும் என் விருப்பத்தை சொன்னவுடன்
,பயிற்சிக்காக 16 வயதில் என்னை தனியாக வெளிநாட்டிற்கு
அனுப்புவதில் விருப்பமில்லை. இந்தியாவிலேயே பயிற்சி எடுப்பதற்கு வழி
செய்தபோது, எனக்குத் துணையாக என்னுடன் வரும்
அம்மாவையும் "நீயும் என் பயிற்சியில்
சேரக் கூடாது?" என்று கேட்டு அப்பாதான்
ஊக்கப் படுத்தினார். அம்மாவிற்கு அப்போது வயது 37.அப்படிதான்
நாங்கள் இருவரும் சேர்ந்து பயிற்சி எடுத்து Pilot லைசென்ஸ்
வாங்கினோம்.
Limca Book of
Records-ல் உங்களுடைய
பெயர் இடம் பெற்றிருக்கிறது. எந்த
சாதனைக்காக என்று கூற முடியுமா
?
Pilot license
வாங்குவதற்கு 18 வயது
முடிந்திருக்க வேண்டும். நான் 18 வயது முடிவதற்கு முன்னரே பயிற்சியை
முடித்து விட்டாலும், லைசென்ஸ் வாங்குவதற்காக பொறுத்திருந்து 18 வயதில் வாங்கினேன். அந்த
வகையில், இந்தியாவிலேயே , மிக இளம் வயதில்
லைசென்ஸ் வாங்கியவர் என்றமுறையில் ல் என் பெயர்
இடம் பெற்றிருக்கிறது. அதே போல 2012- ல், 21 வயதில்
Commercial Pilot License வாங்கியது
, அம்மாவும் பெண்ணுமாக சேர்ந்து பயிற்சி எடுத்து லைசென்ஸ்
வாங்கியது போன்ற 4 சாதனைகளுக்காக Limca Book of Records- ல் இடம் பெற்றுள்ளது.
பள்ளி முடித்தவுடனேயே இதில் வந்துவிட்டதால், மேலே
படிப்பதற்கு உங்களுக்கு விருப்பம், வாய்ப்பு இருந்ததா ?
நான் Aviation-ல degree பண்ணினேன். இப்போது American university-ல் M.B.A.படித்துக் கொண்டிருக்கிறேன்.
நீங்கள்
commercial Pilot ஆனபின், உங்கள் விமானத்தில்
பல பிரபலங்கள் வந்திருப்பார்கள். அவர்களில் யாராவது...
ஆமாம்.
ஒரு முறை டாக்டர். கலாம்
அவர்கள் என் விமானத்தில் travel பண்ணுவது
தெரிந்து நான் cockpit- லிருந்து போய் அவரை சந்தித்து பேசினேன். அவரும் என்னை நன்கு
ஞாபகம் வைத்து பேசியது மகிழ்ச்சியாக
இருந்தது.ஏனென்றால் முதல் வாரம் தான்
அவர் கையால் award வாங்கி
இருந்தேன்.
இது தவிரவும், உங்களுக்கு music , drawing போன்றவற்றில்
மிகுந்த ஆர்வம் உண்டு என்பது
குறித்து..
ஆம்.
music , drawing எல்லாவற்றிலும்
நான் மாநில அளவில் prize வாங்கி
இருக்கிறேன்.
நீங்கள்
எதை செய்தாலும் அதில் உங்கள் முழு
திறமையையும் வெளிப்படுத்தி excel பண்ணுகிறீர்கள்.
உங்களை
சாதனையாளராக மாற்றி இருப்பதும் உங்களுடைய
இந்த approach தான் என்று தோன்றுகிறது.
ஒரு தமிழ் பெண் இந்திய
அளவில் இளம் வயது சாதனையாளராக
அதுவும் 4 விதமான சாதனைகள் பண்ணி
இருப்பது தமிழ் நாட்டிற்கே பெருமை.
நன்றி பவிகா பாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக